அதானி நிறுவன மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: அதானி நிறுவன மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பங்குச்சந்தையில் அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளது செபி விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அதானி நிறுவன மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படும். அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எஃப்.பி.ஐ. நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளது செபி ஆய்வில் அம்பலமாகியுள்ளது. விதிகளை மீறி பங்குச்சந்தையில் அதானி நிறுவனம் முதலீடு செய்து முறைகேடு செய்துள்ளதை செபி கண்டறிந்துள்ளது என காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது. அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய தகவல்களை மறைத்துள்ளன என செபி தெரிவித்திருந்தது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்