அதானி முறைகேடு விவகாரம்; இன்னொரு எஸ்பிஐயாக செபி மாறிவிடக் கூடாது: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமம் வரலாறு காணாத மோசடி செய்ததாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணை நடத்தி வருகிறது. இதன் அறிக்கையை செபி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று, காங்கிரஸ் பொதுச் செயலாளர் விடுத்த டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: புனிதத்தை தொடுவதற்கு பயப்படும் மற்றொரு எஸ்பிஐயாக செபி மாறிவிடக் கூடாது.

அதானி குழுமம் மீதான விசாரணை அறிக்கையை 2023 ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட அவகாசம் ஏப்ரல் 3ம் தேதியுடன் முடிகிறது. இதனால் இன்று (நேற்று) நீதிமன்றத்தில் செபி அறிக்கை சமர்பிக்கும் என எதிர்பார்க்கிறோம் ஆனாலும் இந்த விவகாரத்தில் மோதானி (மோடி-அதானி) ஊழலின் உண்மையான அகலத்தையும், ஆழத்தையும் வெளிப்படுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையால் மட்டுமே முடியும். இன்னும் 3 மாதத்தில் கூட்டுக்குழு அமைப்பது உண்மையாகி விடும். இவ்வாறு கூறி உள்ளார்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை