அதானி விவகாரத்தில் தொடர்பு செபி தலைவர் மாதபி பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: அதானி குழுமத்தின் பங்குச்சந்தை முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மதாபி புச் மற்றும் அவரது கணவர் பங்குகளை வைத்திருந்ததாக அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தது. இந்த நிலையில், தி மார்னிங் கான்டெக்ஸ்ட் எனும் பத்திரிகையில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தி மார்னிங் கான்டெக்ஸ்ட், செபி தலைவரின் மற்றொரு முரண்பாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தனியார் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் மூத்த ஆலோசகராக செபி தலைவரின் கணவர் பணியாற்றி உள்ளார். அந்த நிறுவனத்திற்கு சாதகமாக பல நடவடிக்கைகளை செபி தலைவர் மேற்கொண்டுள்ளார். எனவே இனியும் அவர் செபி தலைவராக பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு கூறி உள்ளார்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?