ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் மேம்பால தூண்களில் ஓவியம் வரைவதற்கு ரூ.15.3 லட்சம் நிதி: திமுக பிரமுகர் வழங்கினார்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் மேம்பால தூண்களில் ஓவியங்கள் வரைவதற்கு ஆலந்தூர் பகுதி திமுக சிறுபான்மைப்பிரிவு அமைப்பாளர் ரூ.15.3 லட்சம் நிதி வழங்கினார். வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணிகள் நிறைவு பெற்று, மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், நீரூற்றுடன் கூடிய பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்குள்ள ராட்சத தூண்களில் பழங்கால ஓவியங்கள் வரைவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தன்னார்வளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்பேரில், ஆலந்தூர் 12வது மண்டலம் 165 மற்றும் 162வது வார்டுகளுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 83 மேம்பால தூண்களில் பாரம்பரிய ஓவியங்கள் வரைவதற்காக ஆலந்தூர் பகுதி திமுக சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளரும், என்எஸ்டி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் உரிமையாளருமான கிறிஸ்டோபர் ரூ.15.3 லட்சத்திற்கான காசோலையை ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் சந்திரனிடம் நேற்று முன்தினம் வழங்கினார். அவர், அந்த காசோலையை ஆலந்தூர் 12வது மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரிடம் சந்திரன் வழங்கினார். அப்போது ஆலந்தூர் 165வது வார்டு மாநகராட்சி உதவி பொறியாளர் அலமேலு உடன் இருந்தார். இந்த நிதியுடன் மேலும் ரூ.15 லட்சம் மாநகராட்சியின் பங்காக செலுத்தப்பட்டு பணிகள் தொடங்கும் என மண்டலக்குழுத் தலைவர் சந்திரன் தெரிவித்தார்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்