நடிகைக்கு பாலியல் தொல்லை; நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு தடை விதிப்பு!

டெல்லி: நடிகைக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் சித்திக்கை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சித்திக் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரினார். அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்; அதுவரை சித்திக்கை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் அறையில், தனக்கு திரைப்பட வாய்ப்பு தருவதாக கூறி சித்திக் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் முன் ஜாமின் கோரி, சித்திக் உச்சநீதிமன்றத்தை நாடினார். அதில் சித்திக்கை இடைக்காலமாக கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.

அப்போது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு, 2019ல் ஹேமா கமிட்டி அறிக்கை சமர்பிக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னரே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பல பெண்கள் புகார் அளித்து வருகின்றனர். 30 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னால் எதையும் நினைவுப்படுத்த முடியவில்லை என நடிகர் சித்திக் கூறுகிறார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஆதாரங்களை அழிக்க முயற்சிப்படுகிறார்” என அரசு வழக்கறிஞர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, நடிகர் சித்திக் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.கிரி அவகாசம் கோரினார். அதனையேற்ற நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். அதேநேரத்தில் சித்திக் மீதான கைது நடவடிக்கை மேற்கொள்ள விதித்த தடையையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.

 

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை