நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி அதிபர் டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகள் நிரூபணம்: ஜூலை 11ம் தேதி தண்டனை அறிவிப்பு

வாஷிங்டன்: நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவரங்களை முறைகேடாக மறைத்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக 34 குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளது.கடந்த 2016ல் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னர் தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸூக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் 1.3 லட்சம் டாலர் (சுமார் ரூ.109 கோடி) அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இவ்விவகாரத்தில் டிரம்ப்புக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக தனது நிறுவனக் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், வழக்கின் பல கட்ட விசாரணைக்கு பின், டிரம்ப்புக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த ஒருவர் மீது குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது வரலாற்றில் இதுவே முதல்முறை.

இதையடுத்து, இந்த வழக்கில் தண்டனை விபரங்கள் ஜூலை 11ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையின் போது வழங்கப்படும் என்று நியூயார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிரம்புக்கு சிறை தண்டனை விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஜூலை 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஜூலை 11ம் தேதி டிரம்ப் மீதான தண்டனை வெளியாக உள்ளதால், அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்