கோர்ட் உத்தரவு வராததால் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடாமல் சென்ற நடிகை ரஞ்சனா நாச்சியார்

சென்னை: நிபந்தனை ஜாமீன் குறித்து நீதிமன்ற ஆணை நகல் வராததால், மாங்காடு காவல் நிலையத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியார் கையெழுத்திடாமல் திரும்பி சென்றார். குன்றத்தூர் அருகே பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்களை தாக்கியதாலும் டிரைவர், ண்டக்டரை தரக்குறைவாக பேசியதாலும் நடிகையும் பாஜ நிர்வாகியுமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் நீதிமன்றம் அவரை விடுவித்தது. நாள்தோறும் மாங்காடு காவல் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

நேற்று காலை மாங்காடு காவல் நிலையத்துக்கு ரஞ்சனா நாச்சியார் கையெழுத்திட வந்திருந்தார். எனினும், நீதிமன்றத்தில் இருந்து மாங்காடு காவல் நிலையத்துக்கு நிபந்தனை ஆணை வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நடிகை ரஞ்சனா நாச்சியார் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் திரும்பி சென்றார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘நடிகை ரஞ்சனா நாச்சியாரின் நிபந்தனை ஜாமீன் குறித்து இன்று அல்லது நாளை காவல் நிலையத்துக்கு நீதிமன்ற ஆணை நகல் வரும். அதன்பிறகு கையெழுத்திடுவார்’’ என்று தெரிவித்தனர்.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி