நடிகை கவுதமியின் சொத்து அபகரிப்பில் கைதான பாஜ பிரமுகர் அழகப்பனிடம் 3 நாள் காவலில் விசாரணை: மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு அனுமதி

சென்னை: பிரபல சினிமா நடிகை கவுதமிக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்து அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காரைக்குடியை சேர்ந்த பாஜ பிரமுகர் அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மகள் ஆர்த்தி, உறவினர் சதீஷ்குமார் ஆகிய 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் கடந்த 22ம் ேததி கைது செய்தனர். அழகப்பனை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களை தொடர்ந்து, அழகப்பனை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். நடிகை கவுதமி பாஜவில் இருந்த போது மோசடி நபர் அழகப்பன் மீது மேலிடத்தில் தனது சொத்துக்களை அபகரித்து விட்டதாக ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

ஆனால் பாஜ மேலிடம் அதை கண்டுகொள்ளவில்லை. அழகப்பன் பாஜ மேலிட நிர்வாகிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்தே நடிகை கவுதமி வேறு வழியின்றி தனது சொத்துக்களை மீட்க கடந்த செப்டம்பர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related posts

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பியதாக மாநிலங்களவையில் கூறிய மோடி.. பிரதமர் இதுவரை மணிப்பூர் செல்லவில்லை ஏன்?: காங். ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!!