நடிகர் விஷால் வழக்கு முடித்துவைப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா நிறுவனம் செலுத்தாததால் அபராத தொகையுடன் சேர்த்து 4.88 கோடி செலுத்தியுள்ளேன். நான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கு உத்தரவாதம் வழங்குமாறு லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி