நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அபராதம் செலுத்துவதாக தனிநீதிபதி முன் ஒப்புக்கொண்டு கால அவகாசம் பெற்றுள்ள நிலையில் தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அபராத உத்தரவை திரும்பப்பெறக் கோரி தனிநீதிபதியை அணுக நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!