நடிகர் கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் கமல் நடித்த குணா படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்த மனுவுக்கு ஜூலை 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related posts

கண் திருஷ்டி சரி செய்வதாக பணம் பறிப்பு புகார்..!!

பாராலிம்பிக்கில் தமிழக வீராங்கனைகள் சாதனை

கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்கம் :2025 ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு!!