சிகிச்சை ஓவர், மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: ரசிகர்கள் உற்சாகம்..!

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 30-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சரிசெய்யும் சிகிச்சைகள் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி முதல் தொடங்கி நடந்தது.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவரது இதயத்தில் ரத்த நாளத்தில் ‘ஸ்டென்ட்’ வைக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து ஐசியு பிரிவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். நேற்றிரவு 11 மணி அளவில் சென்னை அப்பல்லோ – மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related posts

மதுரையில் மிளகாய் பொடி தூவி கொத்தனார் கொலை

சென்னையில் 10 விமானங்களின் சேவை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: மோடி இன்று ஆலோசனை