தெலங்கானா தேர்தலில் வாக்களித்தார் ஆந்திராவிலும் வாக்களிக்க நடிகர் நாகபாபு விண்ணப்பம்

திருமலை: தெலங்கானா தேர்தலில் வாக்களித்த நிலையில், தற்போது ஆந்திராவில் நடக்க உள்ள தேர்தலில் வாக்களிக்க நடிகர் நாகபாபு விண்ணப்பித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஜனசேனா கட்சியின் தெலங்கானா மாநில பொது செயலாளர் நடிகர் நாகபாபு இரு வாக்குகள் பதிவு செய்யும் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார். தெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கைரதாபாத் தொகுதியில் நாகபாபு தனது வாக்குரிமையை பயன்படுத்தினார். தெலங்கானா தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆந்திராவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் தேர்தலுக்காக நாகபாபு, குடும்பத்தினர் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது நாகபாபுவின் வாக்காளர் விண்ணப்பம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மங்களகிரி தொகுதியில் அவர் வாக்குரிமைக்கு விண்ணப்பம் செய்துள்ளார். ஏற்கனவே தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் குடியேறிய தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியை சேர்ந்தவர்கள் அந்த மாநிலத்தில் வாக்குரிமையை வைத்துக்கொண்டு ஆந்திராவிலும் வாக்குகளை செலுத்துவதற்காக பதிவு செய்திருப்பதாகவும்.

இதுபோன்று இரட்டை வாக்குரிமை கொண்டு சுமார் ஆந்திராவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்திருந்தனர். ஆந்திராவில் வாக்குரிமை கோரி நாகபாபு விண்ணப்பித்தபோது பூத் லெவல் அதிகாரி விசாரணை நடத்தினார். நாகபாபுவின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அதிகாரிகள் சென்று பார்த்தபோது, ​​வீடு பூட்டியே கிடப்பது தெரிந்தது. எனவே அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகபாபு நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!