புத்தாண்டை கொண்டாட துபாய் சென்ற நடிகர் கைது: உயிருக்கு ஆபத்து இருப்பதாக அலறல்


மும்பை: ஆங்கில புத்தாண்டை கொண்டாட துபாய் புறப்பட்டு சென்ற பாலிவுட் நடிகர் கேஆர்கேவை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகரும், திரைப்பட விமர்சகருமான கமல் ரஷீத் கான் (கேஆர்கே) அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, பாலிவுட்டிலும் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருவார். இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டை துபாயில் கொண்டாடுவதற்காக மும்பை விமான நிலையம் வந்த கமல் ரஷீத் கானை, மும்பை விமான நிலையத்தில் வைத்து போலீசார் திடீரென கைது செய்தனர். இந்த தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ‘கடந்த ஒரு வருடமாக மும்பையில் இருக்கிறேன். என் மீதான அனைத்து வழக்குகளிலும் சட்டபடி நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறேன்.

புத்தாண்டை கொண்டாடுவதற்காக துபாய் செல்ல இருந்தேன். ஆனால் என்னை மும்பை போலீசார் கைது செய்தனர். கடந்த 2016ம் ஆண்டில் எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், நான் தேடப்படும் குற்றவாளியாக இருப்பதால் என்னை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், காவல் நிலையத்திலோ அல்லது சிறையிலோ நான் இறந்தால், அது கொலை என்பதை நீங்கள் (மக்கள்) அறிந்து கொள்ள வேண்டும். எனது கைதுக்கு யார் பொறுப்பு என்பது உங்களுக்கு தெரியும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது சமூக வலைதள பதிவை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் செய்தி சேனல்களுக்கு அவர் டேக் செய்துள்ளார்.

Related posts

பிணையில் வருபவர்களிடம் கூகுள் லோகேஷன் கோரி நிபந்தனை விதிக்க கூடாது: காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆணை

விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு