அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் பேருந்தை வழிமறித்து ஏறியுள்ளனர். இதை தொடர்ந்து, டிரைவர் ரெஜின் மற்றும் நடத்துநர் பாண்டி ஆகியோரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியதில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு பேருந்து ஊழியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடுஞ்செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க, தமிழக காவல்துறை பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

Related posts

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை