அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: மேற்கு வங்க போலீசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா,: மேற்கு வங்கம், சந்தேஷ்காலியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 5ம் தேதி சோதனைக்கு சென்றனர். அப்போது ஷாஜஹானின் ஆதரவாளர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஷாஜஹான் தலைமறைவாகி உள்ளார்.

இந்த தாக்குதலில் 3 அதிகாரிகள் காயமடைந்தனர். இந்நிலையில், அமலாக்கத்துறை வக்கீல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில்,சந்தேஷ்காலி சம்பவத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரியவருகிறது.

அதில்,அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். இதை விசாரித்த நீதிபதி ஜெய் சென்குப்தா அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று வாய்மொழியாக போலீசுக்கு உத்தரவிட்டார்.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்