கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

துரைப்பாக்கம்: கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையோரம் மீன் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு வரும் வாகன ஓட்டிகள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரிதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதனையடுத்து நேற்று சென்னை தெற்கு போக்குவரத்து காவல் ஆணையாளர் கங்காதரன், அடையாறு போக்குவரத்து உதவி கமிஷனர் திருவேங்கடம் ஆகியோர் உத்தரவின்பேரில், நீலாங்கரை இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை 5 அடி உள்ளே தள்ளி வைக்கும் படியும், தற்காலிகமாக கயிறு மூலம் தடுப்பு அமைத்தும் சாலையை சுத்தப்படுத்தினர்.

மேலும் அங்கு மீன் கடைகள் வைத்துள்ள பெண்களிடம் போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கும் வகையில் தங்களது மீன் கடைகள், நிழற்குடைகள் மற்றும் மீன் குளிரூட்டும் பெட்டிகள் மற்றும் மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே இடையூறு ஏற்படாத வண்ணம் கடைகள் மற்றும் தங்களது பொருட்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி ஓரமாக வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதுகுறித்து மீன் கடை வைத்திருப்பவர்களுக்கும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகன ஓட்டிகளுக்கும் துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு