நாடு முழுவதிலும் இருந்து கல்வி மதிப்பெண் வங்கியில் 3 கோடி மாணவர்கள் பதிவு: யுஜிசி தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் இருந்து கல்வி மதிப்பெண் வங்கியில் 3 கோடி மாணவர்கள் பதிவு செய்திருப்பதாக பல்கலை மானிய குழு தெரிவித்துள்ளது. கல்வி மதிப்பெண் வங்கி நாடு முழுவதிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை ஊக்குவிக்கிறது. இதன்படி, மாணவர் தனது படிப்பின் போது ஏதேனும் ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து அதில் பெறும் மதிப்பெண்கள் கல்வி மதிப்பெண் வங்கியில் தொடர்ந்து வரவு வைக்கப்படும். இதன் மூலம், மாணவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் இருந்து மற்ற கல்வி நிறுவனங்களுக்கு மாறாவோ அல்லது எங்கிருந்தாலும் தங்களது மதிப்பெண் விவரங்களை பெறுவதையும் இந்த டிஜிட்டல் மதிப்பெண் களஞ்சியம் எளிதாக்குகிறது.

இந்நிலையில், பல்கலை மானிய குழு மூத்த அதிகாரி ஒருவர், ‘’இந்த கல்வி மதிப்பெண் வங்கியில் நாடு முழுவதில் இருந்து 3 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர். இதற்கான பதிவு செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தேசிய பாடத்திட்ட கட்டம்மைப்பை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியமானது,’’ என்று தெரிவித்தார்.

Related posts

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை