திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஒப்புகை ரசீது இயந்திரங்கள் சீரமைப்பு

*கலெக்டர் முன்னிலையில் நடந்தது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஒப்புகை ரசீது இயந்திரங்களில் பயன்படுத்தாமல் உள்ள தெர்மல் காகிதங்
களை அகற்றி சீரமைக்கும் பணி நேற்று நடந்தது.திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி முடிந்து, சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 2 மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் ஒப்புகை ரசீது இயந்திரங்களில், பயன்படுத்தாமல் உள்ள தெர்மல் காகிதங்களை அகற்றும் பணி நேற்று நடந்தது.ஒப்புகை ரசீது இயந்திரங்களில் (விவிபேட்) வாக்காளர்கள் பயன்படுத்திய சின்னம் அச்சிட்ட சீட்டுகள், வாக்கு எண்ணிக்கை நாளன்று சம்பந்தப்பட்ட இயந்திரங்களில் இருந்து பாதுகாப்பாக எடுத்து, சீலிட்ட கவரில் வைத்து கருவூலத்தில் பாதுகாக்கப்படுகிறது.

தற்போது, விவிபேட் இயந்திரங்களில் பயன்படுத்தப்படாமல் மீதமுள்ள தெர்மல் காகிதங்கள் மட்டும் அதிலிருந்து அகற்றப்படுகிறது. அதையொட்டி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில், இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திறந்து பார்வையிட்டார்.அதைத்தொடர்ந்து, விவிபேட் இயந்திரங்களில் மீதமுள்ள தெர்மல் காகிதங்கள் அகற்றும் பணி நடந்தது.

இப்பணி முடிந்ததும், மீண்டும் வழக்கம்போல விவிபேட் இயந்திரங்கள் சீர் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. அப்போது, டிஆர்ஓ பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், தாசில்தார் சாப்ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை