சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிராக தானாக முன்வந்து எடுத்த வழக்கிலிருந்து விலக முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் இருந்து விலக முடியாது என்று நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் கூறினார். அமைச்சர் பொன்முடிக்கு எதிராக 1996- 2001ல் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப்படாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கும், பொன்முடி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று உத்தரவிட்டார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வழக்கை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது உயர் நீதிமன்ற நிர்வாக உத்தரவு என்பதால், வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத்துறையை சேர்த்து விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையின் விளக்கத்தையும் கேட்கவில்லை என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையின் போது பதிவுத்துறை இணைக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி வழக்கின் விசாரணையை அக்., 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts

டென்னிஸ் மைதானத்தில் பார்வையாளர் மாடத்திற்கு டென்னிஸ் வீரர் பெயர்

இறுதி கட்டமாக 40 ெதாகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு; ஜம்மு – காஷ்மீரில் இன்றுடன் தேர்தல் நிறைவு: 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை; ஆட்சியை பிடிப்பது யார்?

காஞ்சி கோயில் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு