இடஒதுக்கீட்டின்படி தேர்வான சிவில் நீதிபதிகளுக்கான நியமன ஆணையை ஜூலை 10ம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வுப்பட்டியல், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் வெளியிடப்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்வுப் பட்டியலை ரத்து செய்ததுடன் திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி 14 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 14 பேர் சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நியமன நடைமுறைகள் தொடங்கியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை ஜூலை 10ம் தேதி தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் நியமன உத்தரவுகளை பிறப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.

Related posts

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து