விபத்தில் இறந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு: பார்கவுன்சில் வழங்கியது

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கான விபத்து காப்பீடு திட்டத்தை நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சியை சேர்ந்த வழக்கறிஞர் தியாகராஜன் கடந்த மார்ச் மாதம் விபத்தில் பலியானார். இதையடுத்து, பார் கவுன்சிலின் காப்பீடு திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சத்திற்கான இழப்பீட்டை தியாகராஜனின் மகள் ஹரிணியிடம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வழங்கினார்.

அப்போது, பார்கவுன்சில் துணை தலைவர் வி.கார்த்திகேயன், இணை தலைவர்கள் ஜி.மோகனகிருஷ்ணன், கே.பாலு மற்றும் இன்சூரன்ஸ் அதிகாரிகள் இருந்தனர். இதுகுறித்து பார்கவுன்சில் தலைவர் கூறும்போது, இந்த விபத்து காப்பீடு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் இழப்பீடு தொகையை பெறும் முதல் பயனாளி வழக்கறிஞர் தியாகராஜனின் குடும்பம்தான் என்றார்.

Related posts

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்