அம்மையப்பநல்லூர் கிராமத்தில் மினிலோடு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: போலீசார் விசாரணை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே அம்மையப்பநல்லூர் கிராமத்தில் மினிலோடு ஆட்டோ சாலையோர மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரமேரூர் – வந்தவாசி சாலையில் மினிலோடு ஆட்டோ ஒன்று வந்தவாசியில் இருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அம்மையப்பநல்லூர் கிராமம் அருகே மினிலோடு ஆட்டோ வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராத விதமாக சாலையோர மின் கம்பத்தில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மின் கம்பம் உடைந்தது அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுநர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்திரமேரூர் போலீசார், மின்வாரிய ஊழியர்களின் வரவழைத்து மின்சாரத்தை துண்டித்தனர். மேலும் விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பினை சரிசெய்தனர். பின்னர், காயமடைந்த ஓட்டுநர் சத்தியராஜினை மீட்டு, போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்