விபத்தில் மின்துறை அதிகாரி உயிரிழப்பு: ரூ 80 லட்சம் இழப்பீடு வழங்க பண்ருட்டி மக்கள் நீதிமன்றம் உத்தரவு

கடலூர்: விருத்தாச்சலம் வடக்கு வெள்ளூர் சேர்ந்த நாகமுத்து மகன் சங்கர் (வயது 48).கடந்த 16.09.2023 அன்று இரு சக்கர வாகனத்தில் தனது மகள் ஸ்வேதாவுடன் பண்ருட்டி பணிக்கன் குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக நஷ்ட ஈடு பெற்றுத்தர கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர்கள் மூலம் மனைவி மகேஸ்வரி, தந்தை நாகமுத்து மற்றும் பிள்ளைகள் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.

மேற்படி வழக்கில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் இறந்த சங்கர் குடும்பத்திற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சித்தார்தர், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி பிரவீன் குமார், வழக்கறிஞர் உறுப்பினர் அருண்குமார் நஷ்ட ஈடாக ரூ.80 லட்சம் வழங்க உத்தரவு நகல் வழங்கினார்கள்.

Related posts

மருத்துவ பிழை, மருந்து பிழை, மருந்தக பிழை, மருத்துவ உபகரண செயல்இழப்புகளால் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் தவறுகள்: விழிப்புணர்வு நாளில் ஆதங்கம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் மனு..!!

தரைப்பாலத்தின் நடுவே விரிசலால் ஆபத்து: புதிதாக கட்ட 10 கிராமமக்கள் வேண்டுகோள்