அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் மாற்றம்: நிர்வாக இயக்குநர் தகவல்

சென்னை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் மாற்றப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 1978ம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறுவனமாக தொடங்கப்பட்டு வெளிநாட்டு வேலைநாடுநர்களை வெளிநாடுகளில் பணியமர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்திய கம்பெனிகள் சட்டம், 1956-ன்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் இந்திய குடிபெயர்வோர் சட்டம் 1983-ன் கீழ் ஆட்சேர்ப்பு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு வேலைகளில் பணியாளர்களை பணி அமர்த்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உரிமம் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் வலைதளம் www.omcmanpower.com என்ற தனியார் களத்தில் இருந்து தமிழக அரசின் www.omcmanpower.tn.gov.in என்ற களத்தில் மாற்றப்பட்டுள்ளது. எனவே வெளிநாடு செல்ல விருப்பமுள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வளைதளத்தில் பதிவுசெய்து பயனடையுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு