சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்து விடும்: கவர்னருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

அவனியாபுரம்: ‘சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்து விடும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி தந்து உள்ளார். மதுரை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வருவது போல் தெரியவில்லை. மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து 10 வருடமாக கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப்போகிறார்கள் என்ற தெளிவு இல்லை. ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து வருகிறோம். தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுவதால் தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் இருக்கக் கூடாது. சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்து விடும் என நான் நம்புகிறேன். நீங்கள் நம்பவில்லையா, நம்புங்கள்’’ என்றார்.

Related posts

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

தாய்லாந்தில் இருந்து பச்சோந்திகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது