உ.பி மாநிலம் நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலை கழகத்தில் மாணவி சுட்டுக்கொலை..!!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலை கழகத்தில் மாணவி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த அனுஜ் என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவியான நேஹா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாணவி நேகாவுடன் சாப்பிடும் அறைக்கு வெளியில் நின்று அனுஷ் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த நேரத்தில் திடீரென அனுஜ் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து, நேஹாவை சரமாரியாக சுட்டான். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்நிலையில, நேஹாவை சுட்ட அனுஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிக்குச் சென்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதையடுத்து, அங்கிருந்த சக மாணவர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அனுஜ், நேஹா இருவருக்கும் காதல் இருந்ததாகவும், நீண்ட நாட்களாக அவர்களுக்குள் தகராறு இருந்ததாகவும் தெரிகிறது. மேலும் அனுஜுக்கு எப்படித் துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

Related posts

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து