ஆரோக்கியம் அள்ளிக் கொடுக்கும் ABC ஜூஸ்!

ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றும் சேர்ந்துதான் ஏபிசி ஜூஸ் என அழைக்கப்படுகின்றன(Apple, Beetroot, Carrot – ABC). இவை மூன்றுமே ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றை ஒன்றாக உட்கொள்ளும்போது ஆச்சர்யமான நன்மைகள் பல கிடைக்கும்.

ஜூஸ் தயாரிப்பது எப்படி?

ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், 2 கேரட் இவைகளை சிறிது துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதனை அப்படியே பருக வேண்டியது.

ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளை என்னென்ன?

நச்சு நீக்கம்: ஆப்பிள் பீட்ரூட், கேரட் ஜூஸ் பருகுவதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி விடலாம். குறிப்பாக பீட்ரூட் இயற்கை நச்சு நீக்கியாக செயல்பட்டு கல்லீரலை
சுத்தப்படுத்த உதவுகிறது.

செரிமானம்: ஆப்பிள்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சீரான செரிமானத்துக்கு உதவும். கேரட் குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான செயல்பாட்டுக்கும் முக்கிய பங்கு வகிக்கும் ஜூஸ். தவறாமல் உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: இந்த ஜூஸ் கலவையில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன. அவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆப்பிள் மற்றும் பீட்ரூட்களில் காணப்படும் வைட்டமின் சி ேநாய்த் தொற்றுகளை எதிர்த்து போராடி உடல் ஆற்றலை மேம்படுத்தவும் உதவி செய்கின்றன.

சருமநலம்: இந்த ஜூஸ் கலவையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை சருமத்தில் பளபளப்பை பெறதக்க வகையில் உதவிபுரிகின்றன. கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் சருமத் திசுக்களை சரி செய்ய உதவுகின்றன. சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு வழங்குகின்றன. அத்துடன் இந்த ஜூஸில் இருக்கும் நச்சு நீக்கும் பண்புகள் முகப்பரு மற்றும் சருமம் சார்ந்த பிறபிரச்னைகளை குறைக்க உதவும்.

உடல் ஆற்றல்: பீட்ரூட் ரத்த ஓட்டத்தையும், தசைகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தையும் துரிதப்படுத்த உதவிபுரிகின்றன. உடல் செயல்திறனையும் மேம்படுத்துகிறது. ஆப்பிள் மற்றும் கேரட்டில் உள்ள இயற்கைச் சர்க்கரைகளும் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றது.

இதய ஆரோக்கியம்: இந்த ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அதே வேளையில் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் இதயநோய் அபாயத்தைக் குறைக்கிறது. கேரட் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

எடை மேலாண்மை: இந்த ஜூஸில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. உடல் எடையைக் குறைப்பதற்கும், உடல் எடையைச் சீராக நிர்வகிப்பதற்கும், இது சரியான தேர்வாக அமையும். நொறுக்குத் தீனிகள் போன்ற ஆரோக்கிய மற்ற உணவுகளை உண்ணும் ஆர்வத்தைக் குறைத்து நீண்ட நேரம் பசி உணர்வு இன்றி வயிற்றை நிறைவாக வைத்திருக்கவும் வழிவகை செய்கிறது.
– அ.ப. ஜெயபால்

 

Related posts

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு