நிதி ஆயோக்கை கைவிடுங்கள் திட்டக்குழுவை மீண்டும் கொண்டு வாருங்கள்: மம்தா

புதுடெல்லி: நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற மேற்குவங்க முதல்வர் மம்தா கூறுகையில், ‘ஒன்றியத்தில் மீண்டும் பா.ஜ ஆட்சி அமைத்துள்ளது. அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் அரசியல் ரீதியாக ஒரு பக்கசார்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. நிதி ஆயோக்கிற்கு நிதி அதிகாரம் இல்லை என்பதை நான் அறிந்திருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு பொதுவான மேடையில் இந்தக் குரலை எழுப்புவது எனது கடமை என்று நான் நினைத்தேன். நிதி ஆயோக் உருவானதிலிருந்து, அவர்களுக்கு அதிகாரம் இல்லாததால், ஒரு வேலை கூட நடைபெறுவதை நான் பார்க்கவில்லை. முன்பு, திட்டக் கமிஷன் இருந்தது. அதற்கு அதிகாரம் இருந்தது. எனவே தயவுசெய்து திட்டக் கமிஷனை மீண்டும் கொண்டு வாருங்கள். இது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திட்டம், சுதந்திரம் பெற்றதில் இருந்து, திட்டக் கமிஷன் நாட்டிற்காக நிறைய உழைத்துள்ளது’ என்றார். பின்னர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி சுனிதாவை மம்தா சந்தித்து பேசினார்.

Related posts

100 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது