தினக்கூலி முறையை கைவிட்டு மாதச் சம்பளம் வழங்க வேண்டும்: கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு டெங்கு கொசு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் (DBC – Dengue Breeding Checkers) தமிழகம் முழுவதும் சுமார் 38,000 பேர் தினக் கூலி அடிப்படையில் பணி‌யாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலியாக ரூ.200, ரூ.250, ரூ.300, ரூ.440 வரை மாறுபட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த குறைந்த சம்பளமும் கூட மிக‌த் தாமதமாக பல மாதங்கள் கழித்து வழங்கப்படுகிறது. எனவே, தினக்கூலி முறையை கைவிட்டு, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 21,000 வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

ரூ.3 கோடி ரொக்கம், 200 பவுன் நகை, வீட்டை மிரட்டி வாங்கிய நாம் தமிழர் பெண் பிரமுகர்: டாஸ்மாக் பார் ஊழியருடன் கள்ளக்காதலால் ரகசிய திருமணம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 4வது இடம்தான் என்பதால் அதிமுக போட்டியிடவில்லை: அழிவுக்கு ஜெயக்குமார்தான் காரணம்