ஆஷஸ் 2023: பரபரப்பான முதல் போட்டியில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.!

லண்டன் : ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரின் முதல் போட்டி கடந்த ஜூன் 16ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் 393/8 ரன்கள் எடுத்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 273 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் 281 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி,8 விக்கெட்களை இழந்த நிலையில் 282 ரன்கள் குவித்து முதல் போட்டியில் வெற்றி பெற்றது.தொடக்க வீரர் க்வாஜா 2 இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.2வது இன்னிங்சில் கேப்டன் கம்மின்ஸ்(44* ரன்கள்) பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடிய க்வாஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா