ஆம்ஆத்மி எம்பி – நடிகைக்கு ராஜஸ்தானில் திருமணம்: ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: ராகவ் சத்தா – பரினீதி சோப்ரா ஜோடிக்கு வரும் 23, 24ம் தேதிகளில் ராஜஸ்தானில் உள்ள பிரபல ஓட்டல்களில் திருமணம் நடைபெறவுள்ளது. ஆம்ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சத்தா – பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே 13ம் தேதி டெல்லியின் கபுர்தலா இல்லத்தில் நடந்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராகவ் சத்தா – பரினீதி சோப்ரா ஜோடிக்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வரும் 23, 24ம் தேதிகளில் லீலா பேலஸ் மற்றும் தி ஓபராய் விலாசில் திருமணம் நடைபெறவுள்ளது.

200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட வி.வி.ஐ.பி விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேற்கண்ட இரு ஓட்டல்களிலும் திருமண சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருமணத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் மணமகளான பரினீதி சோப்ராவின் உறவினரான பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோரும் கலந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி