ஆடி அமாவாசையை முன்னிட்டு திருமூர்த்திமலையில் குவிந்த பக்தர்கள்!

உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். தை அமாவாசை, ஆடி அமாவாசை தினங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அதன்படி, ஆடி அமாவாசை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்து அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டனர். பக்தர்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் விவசாயிகள் வந்திருந்தனர். அணை கரையோரம் மாட்டு வண்டிகளை நிறுத்தி இருந்தனர்.

பஞ்சலிங்க அருவியில் குறைந்தளவே தண்ணீர் விழுந்ததால் பக்தர்கள் அருவிக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை. குடும்பம் குடும்பமாக வந்து, இறந்த தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!