ஆடி மாத பூஜைகள் தொடக்கம்: சபரிமலையில் பக்தர்கள் குவிகின்றனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்கின. இதை முன்னிட்டு கனமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின.

இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படிபூஜை உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த 5 நாளிலும் காலை 5.20 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தலாம். அதைத்தொடர்ந்து வரும் 20ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும். சபரிமலையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Related posts

ஏரியில் பெண் சாமியார் வெட்டிக்கொலை: சென்னையை சேர்ந்தவர்?

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜஅமாத் தலைவர்கள் சந்திப்பு

பெண் தாசில்தாருக்கு மிரட்டல்; நெல்லை பெண் போலி ஐஏஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு: பாஜ பிரமுகரும் கைது