ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு: கனமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகள் இன்று தொடங்குகின்றன. இதையொட்டி கோயில் நடை நேற்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார். கனமழையிலும் பக்தர்கள் அங்கு குவிந்தனர். இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தினமும் காலை 5.20 மணி முதல் 10 மணி வரை நெய்யபிஷேகமும் நடைபெறும். வரும் 20ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

Related posts

இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

திருப்பதி அருகே கார்மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!

கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளன: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்