ஆதார் அட்டை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் முருகன் தாக்கல் செய்த மனு வாபஸ்

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைக்குபின், திருச்சி அகதிகள் முகாமில் உள்ள முருகன், லண்டனில் உள்ள மகளுடன் வசிப்பதற்காக பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் அட்டை வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் மனு விசாரணைக்கு வந்தபோது, ஆதார் அட்டை வழங்குவது கலெக்டர்தான் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுவை வாபஸ் பெறுவதாகவும், தமிழக அரசு, மாவட்ட ஆட்சியரை இணைத்து புதிய மனு தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதற்கிடையில், சாந்தன் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிைவத்தனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!