கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனத்தை மறித்து உணவு தேடிய காட்டு யானை

கோத்தகிரி: கோத்தகிரி -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மினி லாரியை மறித்து உணவு தேடிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் சாலையில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை சாலையோர கடைகளை முற்றுகையிடுவதும் வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகவே நடந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒற்றை காட்டு யானை திடீரென வழிமறித்துள்ளது.

உடனே யானை வருவதை கண்ட டிரைவர் வாகனத்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார்.பின்பு சரக்கு வாகனத்தில் நீண்ட நேரம் உணவைத் தேடிய காட்டு யானை அதில் இருந்த பொருட்களை தும்பிக்கையால் இழுத்து உணவு பொருட்கள் இருக்கிறதா என தேடி பார்த்துள்ளது. இதனால் மலைப்பாதையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது நீண்ட நேரம் யானை சாலையிலேயே நின்றதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.அதன் பின்பு யானை வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் சென்றன. எனவே அடிக்கடி ஒற்றைக் காட்டு யானை சாலையில் உலா வந்து வாகனங்களை வழிமறிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வேறு அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் சாலையோர பள்ளம்: பொதுமக்கள் அச்சம்

தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்