சுற்றுலா பயணிகள் தங்கி செல்ல ஊட்டி ஏரி கரையில் ரூ3 கோடியில் மரக்குடில், டென்ட் அமைப்பு

ஊட்டி: ஊட்டி ஏரி கரைகளில் ரூ.3 கோடி செலவில் மர குடில்கள், மற்றும் டென்டுகள் அமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஊட்டி ஏரி கரைகளில் ரூ.3 கோடியில் டென்ட், குடில்கள் மற்றும் மர குடில்கள் அமைக்கும் பணிகளை சுற்றுலாத்துறை செய்து வருகிறது. இப்பணிகளை வரும் கோடை சீசனுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளை நேற்று ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பணிகளை விரைந்து முடிக்கவும், தரமான முறையில் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘ஊட்டி ஏரி கரையில் சுற்றுலா துறை சார்பில் டென்ட், குடில்கள் மற்றும் ட்ரீ டாப் எனப்படும் மரகுடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் குறைந்த கட்டணத்தில் புக்கிங் செய்து இங்கு தங்கி செல்ல ஏற்பாடு நடக்கிறது’ என்றார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது