கோயம்பேட்டில் மக்கள் வெள்ளம்.. ஆயிரக்கணக்கானோர் திரண்டு விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி


சென்னை: விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் சென்னை கோயம்பேடு வந்துள்ளனர். தேமுதிக நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், சினிமா ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். விஜயகாந்த் வீட்டிலும் கட்சி அலுவலகத்திலும் தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் சென்னை கோயம்பேடு வந்துள்ளனர். கோயம்பேடு மேம்பாலம், கட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வருகையால் சென்னை கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேமுதிக அலுவலகம் முன்பு குவிந்த தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே அதிகளவு வாகன நெருக்கடியால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது