‘புஷ்-அப்’ எடுப்பதற்கு இதுதான் இடமா?… ஆபத்தை உணராத போதை ஆசாமி

ஒடிசா மாநிலம் போலங்கிர் மாவட்டம் பட்நாகர் நகரத்தில் சாலையின் குறுக்கே உயரமான பாதை வழிகாட்டி விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பர கோபுர படிக்கட்டுகளின் வழியாக மீது ஏறிய போதை ஆசாமி ஒருவர், அதன் டாப் பகுதிக்கு சென்றார். ெதாடர்ந்து அவர் ‘புஷ்-அப்’ பயிற்சி மேற்கொண்டார். விபத்தை உணராமல் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கொண்டு ‘புஷ்-அப்’ ெசய்தது, அவ்வழியாக சென்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனை வீடியோவாக எடுத்து சம்பல்புரி மஹானி என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘எங்களுக்கு போதை கொஞ்சம் அதிகமானால், இப்படி தான் நடந்து கொள்வோம்’ என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவர், ‘ஏழைக்கு ஜிம் எங்கே? என்று கூடத் தெரியாது. அதனால் அவர்கள் குடித்துவிட்டு இப்படி எல்லாம் சாகசம் செய்கின்றனர். நல்லாதான் இருக்கு…’ என்றும், மேலும் சிலர் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்