ஒரு கிலோ மல்லிகை ரூ4000க்கு விற்பனை

திண்டுக்கல்: திண்டுக்கல் அறிஞர் அண்ணா பூ மார்க்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைபூ ரூ2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ4000ஆக அதிகரித்தது. இதேபோல், ரூ1000 ஆயிரத்திற்கு விற்பனையான முல்லை பூ ரூ1,700க்கும், ரூ650க்கு விற்பனையான ஜாதிப்பூ ரூ1,000க்கும், ரூ1,000க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ1,700க்கும் விற்பனையானது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில், நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ2,500க்கு விற்ற மல்லிகை, நேற்று ரூ3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. ரூ1,200க்கு விற்ற பிச்சிப்பூ கிலோ ரூ2 ஆயிரம், ரூ1,300க்கு விற்ற முல்லைப்பூ ரூ2 ஆயிரத்திற்கு விற்பனையானது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்