‘விரைவில் குப்பைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகும்’

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தமிழ்நாடு கவினாடு கண்மாயில் பனை விதை மரங்களை நடும் பணியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் 249 இடங்களில் குப்பை கிடங்குகள் உள்ளது. இதில் 148 இடங்களில் முழுமையாக பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்பட்டு உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளது. குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 200 கோடி ரூபாய்க்கான உயர்நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விரைவில் மற்ற இடங்களில் பணிகள் முடிந்து முழுமையாக குப்பைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகிகள் 6 பேர் கைது

பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்