அரக்கோணம் அருகே இன்று சரக்கு ரயில் தடம் புரண்டது


அரக்கோணம்: அரக்கோணம் அருகே இன்று அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து இன்று அதிகாலை காலி சரக்கு ரயில் 32 பெட்டிகளுடன் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு புறப்பட்டது. காட்பாடி, அரக்கோணம் வழியாக அதிகாலை 4.20 மணிக்கு மகேந்திரவாடி ரயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென கார்டு பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் பெட்டி சிறிது தூரம் பெரும் சத்தத்துடன் இழுத்துச்சென்றது.

இதையறிந்த டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது சரக்கு ரயில் லூப்லைனில் தடம் புரண்டது தெரியவந்தது. தொடர்ந்து தடம் புரண்ட சக்கரங்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். லூப்லைனில் ரயில் தடம் புரண்டதால் மெயின் லைனில் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

Related posts

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி