கடந்த 40 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட சேதமடைந்த வகுப்பறை கட்டிடம் அகற்றவேண்டும்: பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே மாம்பள்ளம் கிராமத்தில் பழைய ஓடு போட்ட பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு, கூடுதலாக புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே எல்லாபுரம் ஒன்றியம் மாம்பள்ளம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை 70க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஓடு போட்ட வகுப்பறை, தளம் போட்ட கட்டிடம் என 4 வகுப்பறைகள் உள்ளது. இதில் ஓடு போட்ட கட்டிடம் மிகவும் பழுதடைந்து சேதமடைந்துள்ளதால் அதை யாரும் பயன் படுத்துவது கிடையாது. மேலும் சேதமடைந்து பயன்படுத்தப்படாமல் உள்ள ஓடு போட்ட பள்ளி கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்