சில டிஃப்ரன்ட் ரெஸ்டாரென்ட்ஸ்!

வளர்ந்த பெருநகரங்கள் மட்டுமில்லை. வளர்ந்துவரும் சிறுநகரங்களில் கூட தற்போது பல விதம் விதமான ரெஸ்டாரென்டுகள் உதயமாகின்றன. அத்தகைய ரெஸ்டாரென்டுகள் மற்ற உணவகங்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைக்கும் அவற்றின் உரிமையாளர்கள் இன்டீரியர் முதல் பரிமாறப்படும் இலை, தட்டு வரை பல புதுமைகளை புகுத்தி அசத்துகிறார்கள். அந்த வகையில், அடடே! அப்படியா! என ஆச்சரியப்படும் விதத்தில் வித்தியாசமான உணவகங்கள் சில நாடுகளில் இயங்கி வருகின்றன. துபாயில் ஓர் உணவகம் இருக்கிறது. இதன் பெயர் சில் அவுட் ஐஸ் லவுஞ்ச். இந்த உணவகத்தின் இன்டீரியர், டேபிள், குவளை என அனைத்தும் ஐஸ்கட்டியால்தான் தயார் செய்யப்பட்டு இருக்கும். அதுமட்டுமல்ல… இங்கு வழங்கப்படும் பானங்கள் முதல் உணவுகள் வரை அனைத்தும் பனிக்கட்டியாலேயே உருவாக்கப் பட்டு இருக்கும். உணவு மட்டுமல்ல. இங்குள்ள வெப்ப நிலையும் பனிக்கட்டிக்குள் இருப்பது போலவே இருக்கும். அதாவது இங்கு 6 டிகிரிக்குக் குறைவாக வெப்பநிலை பராமரிக்கப்படும். இந்தக் குளிரான சூழலில் உணவருந்துவதே ஒரு புதிய அனுபவமாக இருக்கும். கடலுக்கு அடியில் மீன்களும், பவளப்பாறைகள் உள்ளிட்ட இத்யாதிகளும் நிறைந்திருப்பதை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம்.

ஆனால் மாலத்தீவில் கடலுக்கு அடியில் ஓர் அழகிய உணவகம் செயல்பட்டு வருகிறது. இத்தா என்ற பெயர் கொண்ட இந்த உணவகம் கடல் மட்டத்தில் இருந்து 16 அடிக்கு கீழே அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்குள்ள ரங்காலி தீவு ரிசார்ட்டில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் உணவருந்தும்போது பக்கவாட்டில் உள்ள தெளிவான கண்ணாடி சுவர்கள் வழியாக மில்லியன் கணக்கான மீன்களைப் பார்த்து ரசிக்கலாம். இந்த உணவகம் ஐரோப்பிய உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற உணவகமாகவும் விளங்குகிறது. இலங்கையில் அந்த நாட்டின் பிரத்யேக மீன்பிடி முறையான ஸ்டில்ட் ஃபிஷ்ஷிங் செய்யும் மீனவர்களின் உருவம் மற்றும் உயர் ரக சாக்லேட் கொண்டு ஒரு வித்தியாசமான டெசர்ட் தயாரிக்கப்படுகிறது. இந்த டெசர்ட்டின் பெயர் ஸ்டில்ட் ஃபிஷர்மென் இன்டல்ஜன்ஸ். இத்தாலியன் கஸாட்டா எனும் இனிப்பு வகை, ஐரிஷ் பெய்லி கிரீம் எனும் மதுபான வகை மற்றும் மாம்பழம், மாதுளைப் பழங்களால் தயாரிக்கப்பட்ட கம்போட் எனும் பிரெஞ்சு இனிப்பு ஆகியவை சேர்த்து இந்த சுவையான டெசர்ட் தயாரிக்கப் படுகிறது.உலகின் விலையுயர்ந்த சாக்லேட் பெல்ஜியத்தில்தான் தயார் செய்யப்படுகிறது. அந்த சாக்லேட்டின் பெயர் லிண்டெத் ஹொவி சாக்லேட் புட்டிங். இது விலையுயர்ந்த ஷாம்பெய்ன் ஜெல்லியோடு தங்க முலாம் பூசப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சாக்லேட்டின் மேல் பழத்திற்கு பதிலாக வைரம் வைத்து அலங்கரிக்கப்படுகிறது.

 

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஆற்காடு சுரேஷின் மனைவி கைது: சென்னை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை!!

ரவுடி செல்வத்தை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்: கன்னியாகுமரி அருகே பரபரப்பு

மும்பையில் 2 பாதிரியார்கள் மீது நடந்த தாக்குதல் : 2 பேர் கைது