நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை: பிப். 13ல் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு வருகை..!

டெல்லி: பிப்13-ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமிழ்நாடு வருகிறார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத முதல் வாரத்திலோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தல் பணிகளில் இந்தியா கூட்டணி, பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜ அரசை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இந்த கூட்டணியில் 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனிடையே “இந்தியா கூட்டணி” கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று முதல் பல்வேறு மாநிலங்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயணம் மேற்கொள்கிறார். தெலுங்கானா, ஒடிசா, பீகார், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கும் செல்ல உள்ளார். அந்த வகையில் கார்கே பிப்.13ம் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மல்லிகார்ஜுன கார்கே சந்திக்க வாய்ப்பு உள்ளது. கார்கே தமிழ்நாடு வருகை குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேற்கொண்டுள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது