கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு..!!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பதாரர்கள் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதி இல்லாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு குறுச்செய்தி அவர்களது தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்கள் விரும்பினால் 30 நாட்களில் மீண்டும் இ-சேவை மையத்தின் வழியாக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கொள்கை விளக்க குறிப்பில் மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மேல்முறையீடு செய்யப்பட்டவர்களுக்கு உதவித்தொகை என்பது மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை என்பது மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்