சென்னை:சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பேரவையில் தாக்கல் செய்த சட்ட மசோதா விபரம் வருமாறு: 1997ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்(தமிழ்நாடு சட்டம் 10 1999)23ஏ பிரிவின் படி அரசானது (i)3ம் பிரிவின் (1)ம் உட்பிரிவின் படி அறிவிப்பு வழங்குவதற்கான(ii)4ம் பிரிவின் (1)ம் உட்பிரிவின் முதலாம் வகைமுறையின் படி நிலத்தினை கையகப்படுத்துதலில் இருந்து திரும்பபெறுதல்: மற்றும் (iii)25ம் பிரிவின் படி விதிகளை செய்தல், ஆகிய அதிகாரங்களை தரவி ஆட்சியருக்கு அந்த சட்டத்தின்படியான அனைத்து அதிகாரங்களையும் ஒப்படைவு செய்துள்ளது. தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதலில் செயல்பாடுகள் விரைவுப்படுத்தும் பொருட்டு மேலும், ஆட்சியருக்கு 3ம் பிரிவின்(1)ம் உட்பிரிவின்படி நிலம் கையகப்படுத்துதலுக்கான அறிவிப்பை வழங்குவதற்கான அதிகாரங்களை மேலும் ஒப்படைவு செய்வதற்கு மற்றும் இந்த நோக்கத்திற்கான கூறப்பட்டச் சட்டத்தினை திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது. …