பெரம்பூர்: கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியில் ஸ்டார் கிளினிக் என்ற பெயரில் அனிஷ் அகமது என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். சந்தேகத்தின்பேரில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஊரக நலப்பணிகள் இயக்குனர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஊரக நலப்பணி இணை இயக்குனர் டாக்டர் விசுவநாதன், டாக்டர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது, யுனானி மருத்துவம் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. கிளினிக்குக்கு சீல் வைத்தனர். …