டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,677 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,14,460 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,88,09,339 ஆக உயர்ந்தது.* புதிதாக 2,677 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,46,759 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,89,232 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,69,84,781ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,77,799 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இதன் மூலம், நாட்டின் இதுவரை 23,13,22,417 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….